கிண்ணியா நகர சபை ஒன்று கூடலுக்கான அனைத்தும் பூர்த்தி!




ஹஸ்பர் ஏ ஹலீம்

உள்ளூராட்சி மன்ற சபைகள் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு நடாத்தப்படவிருக்கும் சபைகளில் ஒன்றான கிண்ணியா நகர சபையின் சகல சபை ஒன்று கூடலுக்குமான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

இச் சபை ஒழுங்குகளை நடாத்துவதற்கான சகல நடவடிக்கைகளாக தவிசாளருக்கான அறை உட்பட ஒன்று கூடலுக்கான மண்டபமும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார் இது தவிர கிண்ணியா நகர சபையும் முற்று முழுதாக வர்ணப்பூச்சிக்களால் அலங்காரமாக்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்ச் 6 ம் திகதி அளவில் முதல் சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.