தேசிய அரசாங்கம் பலமற்று போய் விட்டது!

NEWS

தேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
ஹொரனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது நிலையற்று இருப்பதாகவும், நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா என்பது கூட தௌிவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்பான எழுத்து மூல உடன்படிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான உடன்படிக்கையை அவர்கள் வௌியிடுவதில்லை என்றும் இந்த அரசாங்கத்தால் கடந்த மூன்றாண்டுகளாக செய்ய முடியாதவற்றை இந்த ஆண்டில் எவ்வாறு செய்ய முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default