எச்சரிக்கை விடுக்கும் விமல் வீரவங்ச!

NEWS

அமைச்சர் ராஜித சேனாரத்னாக்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் சிறைச்சாலை காற்சட்டையை அணிவிப்பதற்கு தேவையான மக்கள் வரத்தை பெற்றுத் தருமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ராஜித சேனாரத்னாக்கள் மஹிந்த ராஜபக்ஷாக்களை சிறையில் போடுவதாக கூறித் திரிகின்றனர்.  எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் அவர்களை சிறையில் போடுகின்ற நிமிடங்கள் ஆரம்பமாவதாக அவர்களுக்கு நாம் கூறுகின்றோம் எனவும் விமல் வீரவங்ச எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
Tags
3/related/default