நாட்டை மஹிந்தவிடம் ஒப்படையுங்கள்!


தற்பொழுது நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை காணப்படுவதால் யாராவது ஒரு தரப்பினர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலார் மாநாடு இன்று இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்துகொண்டு தமக்கு தேவையான அரசாங்கமொன்றை அமைக்க முடியாது எனின் அந்த பதவியில் இருந்து என்ன பயன் என ஞானசார தேரர் இதன்போது கேள்வி எழுப்பினர்.
இதேவேளை, அரசாங்கத்தை நடத்திச் செல்ல ரணில் விக்ரமசிங்கேவுக்கோ அல்லது உள்ளூராட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று அதிகமானோரின் அப்பச்சியாக மாறியுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கோ இடமளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.