முஸ்லிம்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி அரங்கேற்றம் - பொதுஜன பெரமுன ஊடக அறிக்கை!

NEWS







முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டி 24 மணித்தியாலங்களுக்குள், பொதுபல சேனா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய் பிரச்சாரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டது

அதனைத் தொடர்ந்து முஸ்லிம் கவுன்ஸீல் ஒப் ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் அவர்களால் உகுரஸ்பிடி, வியங்கல்லை ஆகிய இடங்களில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்காத முஸ்லிம்கள் சிலருக்கு, பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கடிதம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியானது

அப்படி ஏதாவது தொந்தரவுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து தூரமாக கையாண்ட பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்

அதேபோன்று மீண்டும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி, எம்மிடமிருந்து தூரமாகும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அலுத்கம கலவரம் தொடர்பிலும், கிந்தொட்டை கலவரம் தொடர்பிலும் அரசாங்கம் கமிஷன் ஒன்றை அமைத்து விசாரனை செய்ய வேண்டும் எனவும் பொதுஜன பெரமுன அரசை வலியுறுத்தி உள்ளது.
Tags
3/related/default