ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26 வது மாபெரும் விழா!

NEWS





(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26வது மாபெரும் விழா-2018 அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதிகளாக குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம் லெப்பை (பலாஹி),மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார்(பலாஹி)ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் கற்று உயர் நிலை அடைந்த உலமாக்கள் உட்பட மத்ரஸாவின் பழைய மாணவர்கள்,2017 டிசம்பர் இம்முறை அல்குர்ஆனை கற்று வெளியான 54 மாணவர்கள் ஆகியோர் சான்றிதழும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,விழாவுக்கு உதவியவர்கள் உட்பட அதி உயர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டோர் பொன்னாடை போர்த்தி விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் விஷேட அம்சமாக 26 வருடத்தில் 1673 மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாவதற்கு அயராது பாடுபட்ட ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் பல்வேறு இஸ்லாமிய கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26வது மாபெரும் விழாவில் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள்,மத்ரஸாவின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags
3/related/default