மனிதன் - யானை மோதல்.. 72 மனிதர்கள் - 285 யானைகள் பலி. #இவ்வருடம் இரத்தினபுரியில்.

ADMIN
0


இரத்தினபுரி மாவட்டத்தில் மனிதன் யானை  மோதலினால் இவ் வருடம் இதுவரை 72 மனிதர்களும் 285 யானைகளும் பலியாகியுள்ளதாக வன பரிபாலன திணைக்கள தகவல் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.


 உடவளவை சங்கபால சிங்கராஜ உட்பட இரத்தினபுரி மாவட்டத்தி லுள்ள காடுகளை அண்டிய சரணா லயங்களின் காரியாலயங்கள் வனபரிபாலணத் திணைக்கள காரியாலய தகவல் குறிப்புக்களில் இத்தகவல் கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 


இத்தகவல்களின் பிரகாரம் காடு களை அண்டிய பிரதேசங்களில் வாழும் அப்பாவி மக்கள் யானைக ளின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந் துள்ளனர். மனிதர்களின் துப்பாக்கிச் சூடு ,நிலப்பொறிகள் கட்டு துவக்கு ஆகியவற்றில் சிக்கி இதுவரை 285 யானை கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default