பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி அன்று பாராளுமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த தினத்தில் பாராளுமன்ற பிரதேசத்திற்கு வருகை தரும் பாரளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக பாதுகாப்பு வீரர்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவாதம் காலை 9 மணி முதல் இரவு 9.30 வரை இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உதவிச் செயலாளர் குமாரி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
