பௌத்தர்கள் முஸ்லிம்களை ஒதுக்கும் அளவுக்கு காட்டு மராண்டிகள் அல்லர் - ஸ்ரீ சுமங்கள தேரர்

NEWS

கண்டி, தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை இரு சமூகங்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவமாக சித்தரிப்பது தவறானது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு தூதுவர்கள் குழுவொன்று நேற்று (27) மகாநாயக்க தேரரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தெல்தெனிய சம்பவம் ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து நடந்து முடிந்த ஒன்றாகும் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
பௌத்தர்கள் வன்முறையற்ற எண்ணக்கருவை ஏற்றவர்கள். அவர்கள் முஸ்லிம்களை ஒதுக்கும் அளவுக்கு காட்டு மராண்டிகள் அல்லர் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
Tags
3/related/default