புனரமைக்கப்பட்ட ஆனமடுவ உணவகம்; பௌத்த தேரர்கள் உதவினர்

NEWS
0 minute read


ஞாயிறு அதிகாலையில் ஆனமடுவ பகுதியில் இனவெறியர்களின் தாக்குதலுக்குட்படுத்தப்பட்ட முஸ்லிம் நபரின் உணவகம் அதே நாள் பிரதேச சிங்கள மக்களின் பங்களிப்பில் புனரமைக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் முன்னெடுப்பில் ஒன்றிணைந்த பிரதேச சிங்கள இளைஞர்கள் இப்பணியில் மும்முரமாக இருந்ததுடன் இனவெறியர்களின் நடவடிக்கைக்குக் கண்டனமும் வெளியிட்டுள்ளனர்.

இனவாத நடவடிக்கைகள் இன்னும் ஓயாத நிலையில் ஆங்காங்கு இவ்வாறான முன்னுதாரங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


To Top