மீராவோடையில் மிதக்கும் உணவகம்; மக்கள் பலர் வரவேற்பு

NEWS


கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலை அண்மித்துள்ள பகுதியில் ஆற்றில் மிதக்கும் உணவகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் மிதந்தவாறு மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தை பார்வையிடுவதற்கும் உணவுவகைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏராளமானோர் வருகை தந்திருந்தமையை குறிப்பிடத்தக்கது.
3/related/default