ஐ.நாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அஸீஸ் நியமனம்!

NEWS
0


ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் காரியாலயத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் மோலனுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸீஸ் கடந்த 26 ஆண்டுகளாக ராஜதந்திர சேவையில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default