பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க நடவடிக்கை!

Image result for மங்கள சமரவீர

பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
காலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு, பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்து அதன் பணியினை விரிவுபடுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்