
நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், உள்நாட்டு ஊடகங்களுக்கு போன்று சர்வதேச ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாம் ஒருபோதும் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்போவதில்லை. எனினும், நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தின் மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு என்ன செய்வது?
உள்நாட்டு ஊடகங்களுக்கு மாத்திரமின்றி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் செய்திக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கமளிக்க வேண்டும்” என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.