தேர்தல் நேரத்தில் கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவில் பணம் விநியோகம்!

Anonymous
0


தேர்தல் நேரத்தில் கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தீப்பெட்டிகளில் மறைத்து வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. இவற்றை செய்த தலைவர்கள் இன்று ஆடைகளை அணிந்து கொண்டு பேசுவது வெட்க கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

சிலர் நாட்டை விற்று தற்போது நாடு பற்றி பேசுகின்றனர். தம்மீது மலத்தை பூசிக்கொண்ட துரைமார் இங்கு தூய்மையானவர்கள் போல் நடந்துக் கொள்கின்றனர்.

தொகுதிவாரி தேர்தல் மூலம் எந்த இனத்திற்கும் அநீதி ஏற்படாது. மோசடியான விருப்பு வாக்கு முறை காரணமாக அரசியலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்த மோசடியான விருப்பு வாக்கு முறையை மீண்டும் கொண்டு வர இடமளிக்க வேண்டாம். தற்போதுள்ள எல்லை நிர்ணய அறிக்கையின்படி எமக்கு தேர்தல் ஒன்றை நடத்த முடியாது எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default