பதுளையில் கடையோன்று தீப்பிடித்ததில் உள்ள இருந்த ஒருவர் உயிரிழப்பு



பதுளை, கொகோவத்த பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 12மணியலவில், 2மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ அருகில் இருந்த விற்பனை நிலையத்திற்குள் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வியாபார நிலையத்தில் இருந்த நபர் பலத்த எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். பதுளை பகுதியை சேர்ந்த 46வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றினைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்