கஹட்டோவிடமுஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா

NEWS
0


முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிள் தொழிற்பயிற்சிக் கூடத்தின் புதிய கட்டட திறப்பு விழா எதிர்வரும் (26)ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஹட்டோவிடவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் அமைப்பின் தலைவருமான எம்.இஸட். அஹ்மத் முனவ்வரின் தலைமையில் நடைபெறும் இத் திறப்பு விழாவில்,  அரசியல் பிரமுகர்கள்,  உலமாக்கள்கல்விமான்கள் எனப் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இக் கட்டடத்தை தனவந்தரும் மெலிபன் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியின் தலைவருமான இல்யாஸ் அப்துல் கரீம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
ஜீ.சீ.ஈ சாதாரண தரஉயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ள முஸ்லிம் பெண்களுக்கான பல தொழிற்பயிற்சிகளைக் கொண்ட நிறுவனமாக கஹட்டோவிடவில் இது அமையப்பெற்றிருப்பதால் இதன்மூலம் பிரதேசத்தின் யுவதிகள் நன்மையடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default