கத்தாரில் தொழில் வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் “Job Vacancies” WhatsApp குழுமம், Sri Lankan Community Development Forum (CDF Qatar) மற்றும் Srilankan Muslim Professional Forum-Qatar (SLMPQ) ஆகியன இணைந்து மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு (Career Guidance Workshop - 2018) ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
தலைசிறந்த வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கருத்தரங்கானது எதிர்வரும் 23ம் திகதி, வெள்ளிக்கிழமை (23rd of November 2018) தோஹாவில் அமைந்துள்ள அல் பனார் கேட்போர் கூட பிரதான மண்டபத்தில் பிற்பகல் 02:30 மணிமுதல் 04:30 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கத்தார் வாழ் இலங்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: 66601040 & 55157092
Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform