சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு

Ceylon Muslim
மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நியமன கடிதங்களை வழங்கி வைத்தார் 

சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் தினைகளத்திற்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்கள் கெளரவ கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் இன்று (13.02.2019) ஆளுநர் செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கிழக்கு ஆளுநரின் செயலாளர் அஸங்க அபேவர்தன, சுகாதார மாகாண அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம் அன்சார் சிறுவர் பராமரிப்பு சேவை திணக்களத்தின் உதவி ஆனையாளர் திருமதி ச. சுதர்ஷன் , சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீவான்கி ,ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ரயீஸ் டீன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். 
Tags
3/related/default