foreign news
News
சிறு பத்திகள்
மத்திய கிழக்கு
நியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா?
தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை "வரலாற்றுப் பகை"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள்.
நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச் நகரிலுள்ள மஸ்ஜிதினுள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி 5 வயது சிறுவன், பெண்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்ற தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள், தீவிரவாதிகளின் வரலாற்று கோபம், வக்கிரம், பகை போன்றவற்றை வெளிப்படுத்துக்கின்றன.
"turkofagos"
----
என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு "துருக்கி கொலைக்காரர்கள்" என பொருள்.
"Miloš Obilić"
----
1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1 அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயர்.
"John Hunyadi"
----
காண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூத் II வின் படைக்கு எதிராக போராடி வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதியின் பெயர்.
"Vienna 1683"
----
உதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு.
இவை எல்லாம் உதுமானிய கிலாஃபத்திற்கு எதிராக கிருஸ்துவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள்.இவைமட்டுமல்லாமல், 'Refugees welcome to Hell' என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது.இது புத்தி நலமில்லாத ஒரு பைத்தியக்காரன் நடத்திய தாக்குதல் அல்ல.
முஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான பாசிஷ தீவிரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்.வரலாற்றை நாம் மறந்து விட்டோம், ஆனால் அவர்கள் மறக்கவில்லை.
பகை காத்திருக்கிறது.
நன்றி நான் யூசுஃப்.