கண்டி மாநாட்டில், வெளிநாட்டு இரகசியங்களை வெளியிடப்போகும் ஞானசார

NEWS
0
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் வைத்து சதித்திட்டம் தொடர்பான விடயமொன்றை அம்பலப்படுத்தப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு உளவுப்பிரிவொன்றால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தவுள்ளோம்.

பொதுபல சேனா அமைப்பால் கண்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாநாடொன்று நடத்தப்படவுள்ளது. இதில் வைத்தே இந்த விடயம் அம்பலப்படுத்தப்படவுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்த போவதாக ஞானசார தேரர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top