ரணிலின் ஆசிர்வாதத்துடன், சஜித் ஜனாதிபதி : மங்கள

NEWS
0 minute read
0
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்த வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரதான காரணங்கள் இரண்டு காணப்படுகின்றன. ஒன்று ஐக்கிய தேசிய கட்சியினால் வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். இரண்டாவது காரணம் குறித்த வேட்பாளர் வெற்றிபெறுபவராக இருத்தல் வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய கட்சியினுள் இத்தகைய அம்சங்களை கொண்ட ஒரே நபராக சஜித் பிரேமதாச காணப்படுவதுடன்,ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் ஆசிர்வாதத்துடன் சஜித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தான் முன்மொழிவதாக அமைச்சர் மங்கள சமரவீ தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)