பாதுகாப்பு முன்னாள் செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய உத்தரவு

NEWS
0


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுத்தர ஆகியோரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியமை தொடர்பில் அவர்களை கைதுசெய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டடுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top