Headlines
Loading...
பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில், முஸ்லிம் பெண்

பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில், முஸ்லிம் பெண்

நாட்டில் வியாபித்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வுகாணும் நோக்கில் நாட்டுமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த மாநாட்டின் பின்னர் வெளிநாட்டு உளவுப் பிரிவு ஒன்றினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு இன்று (02) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் மகாநாட்டுக்கு பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவரையும் பொதுபல சேனா அழைத்து வந்திருந்தது. சிங்கள பௌத்தர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்த அந்த முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஒருவரைத் திருமணம் செய்தமைக்காகத் தனது சமூகத்தவரால் தனக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டதாகக் கூறினார். 

அட்டுளுகம, மாராவ பள்ளிவாசலைச் சேர்ந்தவர்கள் தன்னை அச்சுறுத்தியதாகவும், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் குற்றஞ்சாட்டிய அந்தப் பெண், தனது 11 வயது மகளை முஸ்லிம் நபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு அவர்கள் கேட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

0 Comments: