ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா வெளியானது அதிர்ச்சி தகவல்.



இலங்கையில் நேற்றையதினம் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 10 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொட்டஹேன, கெசல்வத்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண் கொரோனா தொற்றாளரின் அயல் வீட்டுக்காரர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்னொரு அயல் வீட்டுக்காரர்கள் 5 பேரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த பெண் இந்தியாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த நிலையில் 33 நாளின் பின்னர் அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன் அவரது கணவர் மற்றும் 2 மகன்களும் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் இலங்கையில் ஒரே நாளில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

நாட்டில் கொரோனா தாக்கம் குறைந்து கொண்டு சென்றபோது, சடுதியாக ஏற்பட்ட இந்த அதிகரிப்பு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்