இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!



கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விமான நிலையத்தின் பணிப்பாளர் செஹான் சுமனசேகர இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அதன்முதற்கட்டமாக தெற்காசிய நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாடுகளின் தூதுவராலயங்களின் ஊடாக மாணவர்களை ஒன்றிணைத்து நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள 113 மாணவர்கள் நாளை மறுதினம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தியாவில் கல்வி பயிலும் 102 பேரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அடுத்தவாரம் அளவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் விமான நிலைய பணிப்பாளர் செஹான் சுமனசேகர குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்