கொரொனாவால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தைக்கு பால் கொடுத்த தாய்மார்?


நான்கு மாத கைக்குழந்தையின் தாய்க்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க பல பெண்கள் முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு அடுத்த 2 வாரங்களுக்கு தேவையான தாய்ப்பால் கிடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் கொரொனா பரிசோதனை செய்துகொண்ட பெண்ணிற்கு தொற்று இருப்பது தெரிய வந்ததும், அவர் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணின் 4 மாதக் குழந்தைக்கு கடைகளில் கிடைக்கும் பார்முலா பால் பவுடர் என்றால் அலர்ஜி. இதனால் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். என்னசெய்வதென்று தெரியாமல் மருத்துவமனையில் தாய் தவித்துள்ளார். கொரொனா பாதித்த தாய் குழந்தைக்கு பாதுகாப்பாக தாய்ப்பால் கொடுக்கலாம் என கூறப்பட்டாலும், தனி வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள் குடும்பத்தினரை பார்க்க அனுமதி இல்லை.

இதனையடுத்து அந்த ஊரில் இருக்கும் தாய்ப்பால் தானம் வழங்கும் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், அடுத்த சில மணி நேரங்களில் அந்த குழந்தைக்கு 15 லிட்டர் தாய்ப்பால் தானமாக கிடைத்துள்ளது. இதன் மூலம் குழந்தைக்கு அடுத்த 2 வாரங்களுக்கு தாய்ப்பால் கிடைத்துவிட்டதாக குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த செய்தி கேட்ட தாய், என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. பல தாய்மார்கள் என் குழந்தைக்காக தாய்ப்பால் தானம் கொடுத்துள்ளதை நம்ப முடியவில்லை. கடுமையான காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்