மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முபாறக் துணிக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இன்று ஊரடங்கு வேளையில் குறித்த கடை பூட்டி இருந்த வேளை கடையின் உள்ளே மாடிப் பகுதியில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடன் விரைந்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையிலான, தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க முயற்சித்ததுடன், பொலிஸ் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த விபத்து மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என அனுமானிக்கப்படுவதுடன், உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் தீ விபத்தால் எந்த உயிர் பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஏனைய சேத விபரம் குறித்தும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை

0 கருத்துகள்