இலங்கையில் சாரய கடைகளுக்கு வந்த சோதனை..



ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இன்று சாராய வகைகள் வழமையைவிட மும்மடங்கு விற்கப்பட்டதால் சாராய வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாமென மதுபான விற்பனை நிலைய உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.




உள்நாட்டு மதுபான உற்பத்தி ஆலைகள் மேல்மாகாணத்தில் இருப்பதுவும் மேல் மாகாணம் கடந்த சில வாரங்களாக முடங்கிக் கிடப்பதும் இதற்கான காரணமென சங்கம் தெரிவித்துள்ளது.




இன்றைய தினம் காலி மாவட்டத்திலும் மலையகப் பகுதிகளிலும் கூடுதலான அளவில் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




நேற்று மலைநாட்டில் உள்ளூர் மதுபான வகைகள் நன்பகலிலேயே விற்று தீர்ந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்