எனது முறைப்பாட்டே ரிஷாதிடம் நீண்ட நேர விசாரணை - ஆனந்த தேரர்.

ADMIN
0

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசு பரபரப்பாக்கியுள்ள நிலையில் இன்றைய தினம் மன்னாரின் காணி விவகாரம் ஒன்றின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் இன்றைய தினம் நீண்ட நேரம் விசாரணை நடாத்தியுள்ளனர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சரின் சகோதரன் ரியாஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பாஹியங்கல ஆனந்த தேரர் இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடமே தாம் ரியாஜ் மற்றும் ரிசாத் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் அக்கால கட்டத்தில் குறித்த நபர்களைக் கைது செய்ய போதியளவு சாட்சியங்கள் இல்லையென பொலிசார் தெரிவித்ததாகவும் தற்போது கைதுகள் நிகழ்ந்து வருவதால் நீதி நிலை நாட்டப்படுவதாக தமக்கு நம்பிக்கையேற்பட்டுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default