Headlines
Loading...
கடைக்குள் இறந்த ஊழியர் – பொருட்களுக்கிடையில் பிணத்தை மறைத்து வைத்துவிட்டு வியாபாரத்தை கவனித்த நிர்வாகம்.

கடைக்குள் இறந்த ஊழியர் – பொருட்களுக்கிடையில் பிணத்தை மறைத்து வைத்துவிட்டு வியாபாரத்தை கவனித்த நிர்வாகம்.



பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் கடையில் பணிபுரிந்த சேல்ஸ் மேனேஜர் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டார்.




இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்த நபர் இறந்து விட்டார்




இந்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இறந்தவரின் உடலை அகற்றக் கூடாது என்பதால் அந்த உடலை சுற்றிக் குடைகள் மற்றும் அட்டை பெட்டிகள் மூடிவைத்துவிட்டு வழக்கம்போல் வியாபாரத்தை தொடங்கி உள்ளனர்




இந்த சம்பவம் ஒரு வாரத்திற்குப் பிறகு தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து அந்த கடையின் நிர்வாகம் கூறுகையில்




’இறந்த ஊழியரின் உடலை அகற்றக்கூடாது என மருத்துவர்களிடம் இருந்து தகவல் வந்ததால் தற்காலிக குடை மற்றும் அட்டை பெட்டிகள் வைத்து மூடி வைத்தோம் என்று கூறியுள்ளார்




இருப்பினும் இறந்த அந்த ஊழியரின் குடும்பத்தினருக்கும் தாங்கள் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும்




ஊழியர் இறந்தவுடன் கடையை அடைக்காமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

0 Comments: