Top News

நாங்கள் வாக்களிக்காவிட்டால் அரசாங்கத்திற்கு 3/2 பெரும்பான்மை இல்லை தயாசிரி அதிரடி


எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜெய சேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் தண்டனை குறித்து எதிர்ப்பதாக தயாசிறி தெரிவித் தார்.

குறைந்தபட்சம் மனித உரிமைகள் அல்லது ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர மக்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், 19 ஆவது திருத்தத்தை நீக்கவே மக்கள் இம்முறை வாக்களித் துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித் துள்ளது என்றும், தங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இருப்பினும் நாட்டின் தேசிய பிரச்சினையோடு பேச்சுவார்த்தை நடத் தத் தனது கட்சி தயாராக இல்லை என்றும், 19 ஆவது திருத்தத்தை நீக்கும் போது நாட்டிற்கு பொறுப்புக்கூறக்கூடிய ஒரு சீர்திருத்தச் செயல்முறைக்குத் தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புகழ் அழிக்கப்பட்டு புதிய திருத்தத்தைக் கொண்டு வருவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஒரு சிங்கள பத்திரிகைக்கு தயாசிறி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post