டொல்ட் டிரம்ப்பை கடவுளைப் போல வணங்கி வந்த இந்திய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறித்த இந்திய இளைஞன் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் இதை தெரிவித்துள்ளது.
இதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான புஸ்ஸ கிருஷ்ணா விவசாயி என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக டிரம்பை ஒரு தெய்வத்தைப் போல வணங்கியுள்ளார்.
ஆனால் டிரம்பின் நோயை அறிந்த பின்னர் அவர் சாப்பிடுவதை நிறுத்தியபோது உறவினர்கள் கவலைப்பட்டனர் இதையடுத்து அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
0 கருத்துகள்