அரசியலமைப்பின் 20 வது திருத்தம் குறித்த இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது
இன்றைய அமர்வில் அழிவை ஏற்படுத்தும் 20வது திருத்தம் வேண்டாம் என்ற முகக்கவசத்தை அணிந்தவாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்

அத்துடன், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் திருத்தங்களை இன்று மாலை 6 மணிக்கு முன் சமர்ப்பிக் குமாறு பாராளுமன்ற செயலாளருக்கு உத்தர விட்டுள்ள தாக இன்று பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
விவாதத்தின் ஆரம்பத்தில் , நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மற்றும் அரசிய லமைப்பு திருத்தத்தில் அவர் செய்ய விரும்பும் திருத்தங் களின் சுருக்கத்தை முன்வைத்தார்.
அரசியலமைப்புக்குப் பொருத்த மற்ற எந்த ஒரு திருத்தங் களும் குழு கூட்டத்தில் முன்வைக்கப்படமாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்