மினுவாங்கொடை கொரோனா கொத்தனியில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்கு உள்ளாவர்கள் எண்ணிக்கை 2222ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், நாட்டில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5685ஆக காணப்படுகின்றது.

0 கருத்துகள்