இந்த ஆண்டிற்க்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த பரீட்சையின் முதலாவது பகுதி மு.ப. 09.30 – 10.30 மணிவரையும் இரண்டாவது பகுதி 11.00 – 12.15 மணி வரையும் இடம்பெறும்.
இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோருக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இன்றய தினம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ள அத்தனை மாணவர்களுக்கும் சிலோன் முஸ்லிம் இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது .

0 கருத்துகள்