A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நேர மாற்றம் தொடர்பாக கல்வி அமைச்சர் சற்றுமுன் வெளியிட்ட தகவல்.

ADMIN
0

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க நடத்துவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உயர்தர பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பரீட்சையில் தோற்றும் பிள்ளைகளின் உடல் நிலை தொடர்பில் முழுமையான தகவல்களை பெறும் நோக்கில் பெற்றோருக்கு படிவம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சைகள் தொடர்பில் நாளைய தினம் (06) தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default