அரசாங்கம் சரியில்லை என்றால் வீரவங்ச வெளியேறலாம்

ADMIN
0

அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலைமையில், அமைச்சர் விமல் வீரவங்ச, பிரதமர் பதவியை பெறும் கனவில் இரகசிய வேலைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மகிந்த பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் சரியில்லை என்றால், விமல் வீரவங்ச உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் மகிந்த பத்திரன இதனை கூறியுள்ளார்.

தனது சகாக்கள் மூலம் பொய்களை வெளியிடாது, விமல் வீரவங்ச, அரசாங்கம் சரியில்லை என்றால், இன்று கூட வெளியில் செல்ல முடியும் எனவும் மகிந்த பத்திரன தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default