இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்தப் பதவிகள் வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவப் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
கிரிகெட் வீரர் திசர பெரேரா இராணுவத்தின் கஜபா படையணியின் கிரிகெட் வளர்ச்சிக்காக பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், திசர பெரேராகஜபா படையணிக்கு மேஜராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, திணேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தின் Ordnance படையணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டது.

0 கருத்துகள்