மேல் மாகாணத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவு!


“மேல்மாகாணத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு ள்ளதாகத் தெரிவித்த இரானுவத் தளபதி சவேந்திர சில்வா, இம்முறை தொற்று மிகவும் வேகமாக பரவிவருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த சவேந்திர சில்வா; இவற்றை ஆராய்வதற்காக விசேட பரிசோதனைகளை, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் செய்துவருவதாகவும் கந்தகாடு, பேலியகொட, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மாதிரிகளை கொண்டு அறிக்கை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், மேல்மாகாணத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பதைத் தொடர்ந்தே மேல்மாகாணத்துக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்