தபால் ரயில்கள் இடைநிறுத்தம்






இன்று இரவு பயணிக்கவிருந்த இரவு நேர தபால் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்துக்குட்பட்ட பொலிஸ் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதால், இவ் ரயில்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக, ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தபால் ரயிலைத் தவிர ஏனைய ரயில்கள் உரிய அட்டவணையின் படி சேவையில் ஈடுபடுமென்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்