அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பாலாவியில் இன்று (16) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றது.
புத்தளம் பாலாவி இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்களின் முக்
கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நபர்களுக்கிடையிலான தூரம், முகக் கவசம் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது "ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதி அல்ல, அவர் சிறுபான்மை மக்களின் தலைவர்", "சிறுபான்மை கட்சிகளை அழிக்காதே", "சஜித்தை ஆதரித்தது குற்றமா? " உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

0 கருத்துகள்