1.4 மில்லியன் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (ஆரோபிலான்ட்) அமைக்கப்பட்டு அங்கமுகமுவ மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 

-ரிம்சி ஜலீல்-


சிலோன் முஸ்லிம் இணையத்தளத்தின் ஊடக அனுசரணையில் TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் நிதியொதுக்கீட்டில் அங்கமுகமுவ கிராமத்தின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது.


அல்ஹம்துலில்லாஹ்..!!


கல்கமுவ தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அங்கமுகமுவ கிராமத்தில் TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் நிதி உதவியில் குழாய் கிணறு மற்றும் நீர்தாங்கி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக

TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் ஸ்தாபக பணிப்பாளர் இப்திகார் சாதிக்கினால் வைபவ ரீதியாக ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டிருந்தது.


அதன் இரண்டாம் கட்டமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (ஆரோபிலான்ட்) ஒன்று வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டு மக்கள் பாவனைக்காக இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. 


அல்அக்ஸா ஜூம்ஆ பள்ளி தலைவர் அன்வர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் உறுப்பினரும் முன்னாள் விமானப்படை அதிகாரியுமான அஸாம் வைபவ ரீதியாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.


மிக நீண்ட காலமாக அங்கமுகமுவ கிராமத்தில் இருந்த குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் அங்கமுகமுவ அல்அக்ஸா ஜூம்ஆ பள்ளி மற்றும் அங்கமுகமுவ முஸ்லிம் கனிஷ்ட வித்தியாளயம் ஆகிய நிருவாகங்களின் வேண்டுகோளுக்கினங்க TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் நிதி உதவியில் குறித்த குடிநீர் குழாய் கிணறு  அமைக்கப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் வழங்கப்பட்டது.


கல்கமுவ தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அங்கமுகமுவ கிராமத்தில் சுமார் 1.4மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இத்திட்டத்தினூடாக 150 குடும்பங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.


இந்த நிகழ்வில் , அங்கமுகமுவ விகாராதிபதி, அமம்பொல பொலிஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி சேனாநாயக  சிலோன் முஸ்லிம் ஊடகப்பிரதானி ரிம்சி ஜலீல் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















கருத்துரையிடுக

0 கருத்துகள்