சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று 437 ஆக அதிகரிப்பு!



இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 108 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 437 ஆக உயர்வடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணைாயளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை, போகம்பரை, பூசா, மாத்தறை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளிலேயே இவ்வாறு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்