6,000 கொரோனா தொற்றாளர்களைக் கடக்கும் கொழும்பு


கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 6,000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 157 தொற்றாளர்கள் கொழும்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 5,667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் களுத்துறை-2, இரத்தினபுரி-6, காலி-3, அநுராதபுரம்-2, புத்தளம்-1, குருநாகல்-1, நுவரெலியா-1,மாத்தறை-2,பதுளையில் ஒரு தொற்றாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் திணைக்களத்தில் இருவர், பொலிஸ் விசேட படையணி-6, வெலிக்கட சிறையில் 21 கைதிகள்,வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்த 9 தொற்றாளர்களுடன் மொத்தமாக 327 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்