நுவரெலியா- மஸ்கெலியாவில் நான்கு மாத குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,"கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் தாய், தந்தை மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 4பேர் உள்ளடங்குகின்றனர். இதேவேளை மஸ்கெலிய காட்மோர் பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய இருவருக்கும் இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அனைவரும், சிகிச்சைகளுக்காக வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்