வக்பு சபை நியமங்களையும் பேணி பள்ளிவாயல்களை நடாத்துவடு சிரமம் என நினைத்தால் பள்ளிகளை மூடவும் - வக்பு சபை எச்சரிக்கை.


தனிமைப்படுத்தல் ஊரடங்கு இல்லாத பகுதிகளில் ஒரே நேரத்தில் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்று கூடக்கூடிய எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.




சுகாதார வழிமுறைகளையும் வக்பு சபை நியமங்களையும் பேணி பள்ளிவாயல்களை நடாத்துவடு சிரமம் என நிருவாகிகள் தொடர்ந்து தெரிவித்து வருவதோடு பள்ளிவாயல்களை மூடி விடுமாறு வக்பு சபையை வலியுறுத்தி வருகின்றனர்.




ஆகவே, தொழுகின்றவர்கள் பள்ளிவாயலின் மீது அன்பிருந்தால் நிச்சயமாக இந்த இறுக்கமான நிபந்தனைகளைப் பேணுவதற்கு பள்ளிவாயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம். இல்லையேல், பள்ளிவாயல்கள் மூடப்படுவதற்கு அவர்களே காரணமாகி விட நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ரப் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்