ஊரடங்கின் போது வெளியேறவோ உட்செல்லவோ முடியாது - கடும் எச்சரிக்கை முடிவு வெளியானது.






தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து யாரும் வெளியேறவோ அல்லது உட்பிவேசிக்க வோமுடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் உள்ள தொழில் மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடுவோருக்கும் இங்கிருந்து வெளியேறு வதற்கு முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

விசேடமாக சுகாதரப் பிரிவு அறிவித்துள்ளமைக்கு அமைவாக இவை தனிமைப்படுத்தப்பட்ட, ஆபத்தான பிரதேசங்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட வேண்டும். இதற்கமைவாக , இந்த பிரதேசங்களில் பயணிகளை இறக்குதல் அல்லது அழைத்துச் செல்லல் முதலானவற்றை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்