லேக் ஹவுஸில் கடமையாற்றும் எம். மஹ்ரூபின் மனைவி காலமானார்



லேக் ஹவுஸ் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் கடமையாற்றும், மொஹமட் மஹ்ரூப்பின் மனைவியான சித்தி மஸாஹிமா (49) காலமானார்.

சிறிது காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர் இன்று (15) அதிகாலை மரணமடைந்துள்ளார்.



அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15) அஸர் தொழுகையின் பின், அரநாயக்க, வில்பொல அல்மனார் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் மஹ்ரூப் தினகரன் விளம்பரப் பிரிவின் முன்னாள் முகாமையாளர் என்பதோடு, லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸின் முன்னாள் தலைவரும் ஆவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்