பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், பாராளுமன்ற பணியாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பாராளுமன்றத்துக்கு முன்பாக விருக்கும் வாவிக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.
அந்த பஸ்ஸூக்குள் பணியாளர்கள் பலர் இருந்தனர். எனினும், ஏனையோர் இணைந்து பணியாளர்களை காப்பாற்றினர்.
கடுமையான மழை காரணமாகவே இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்து இடம்பெறும் போது, சுமார் 30 பணியாளர்கள் பஸ்ஸூக்குள் இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது.

0 கருத்துகள்